ஆம்னி பேருந்து கட்டண உயர்வை அரசு கண்காணிக்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கை..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (10:56 IST)
ஆம்னி பேருந்து கட்டண உயர்வை அரசு கண்காணிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
 
மேலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடர் மக்கள் இயக்கம் நடத்தி வருகிறோம் என்றும்,  இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
 
மேலும் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு கண்டனத்துக்குரியது என்றும், இதனை அரசு கண்காணித்து கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
 
மேலும் விடுமுறைக் காலங்களில், ரயில்வே நிர்வாகத்திடம் பேசி சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. குப்பை தொட்டியில் வீசியதால் பரபரப்பு..!

ஈரான் போரால் 1000 டன் இந்திய கன்டெய்னர்கள் முடக்கம்.. அழுகும் நிலையில் வேளாண் பொருட்கள்..!

ஈரான் எதிராக களமிறங்கும் இன்னொரு நாடு.. தூதர்களை திரும்ப பெற்றதால் பரபரப்பு..!

அமெரிக்கா ஏன் அனுமதி கொடுக்கணும்!.. மோடியை விளாசிய ஸ்டாலின்..

விஜய் ஒரு Sorry சொன்னா போதும்!. எல்லாம் முடிந்துவிடும்!.. சீமான் பேட்டி!..

அடுத்த கட்டுரையில்
Show comments