Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பார்க்க கூடாது - தென்முடியனூர் சம்பவம் தொடர்பாக சத்குரு ட்வீட்

தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பார்க்க கூடாது - தென்முடியனூர் சம்பவம் தொடர்பாக சத்குரு ட்வீட்
, திங்கள், 6 பிப்ரவரி 2023 (12:44 IST)
“தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே பாகுபாடு பார்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்” என சத்குரு தெரிவித்துள்ளார்.
 

திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் செல்ல கடந்த 80 ஆண்டுகளாக அனுமதி  வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை சேர்ந்த தலித் மக்கள் மாவட்ட ஆட்சிரியரிடம் இது குறித்து புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் தலித் மக்கள் 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக முத்துமாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சத்குரு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தெய்வீகமும் பாகுபாடும் ஒன்றாக இருக்க முடியாதவை. தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே நாம் பிரித்துப் பார்ப்பதே வெட்கப்பட வேண்டிய விஷயம். யார் தலீத் யார் இல்லை என்று நாம் யோசிக்கவே கூடாது. தென்முடியனூருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/SadhguruJV/status/1620377559447003136

ஈஷாவில் உள்ள தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியில் துவக்கம் முதலே அனைத்து தரப்பு மக்களும் எந்த வித பாகுபாடின்றி அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் யார் வேண்டுமானாலும் தியானலிங்கத்திற்கு பால் மற்றும் தண்ணீர் அபிஷேகம் செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்பம் தரித்த தந்தை, தாயாக போகும் திருநங்கை - மாற்றுப் பாலின தம்பதியின் கதை!