Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டு கேட்டு கிராமத்திற்கு வர வேண்டாம்! மக்கள் ஆவேசம்

Advertiesment
Tiruppur

SInoj

, செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (15:52 IST)
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஓட்டு கேட்டு எந்தக் கட்சியினரும் கிராமத்திற்கு வர வேண்டாம் என்று மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
 
மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தேர்தலின்போது மக்கள் வேட்பாளர்களிடமும் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கும் விஷயம்.
 
ஆனால், அது குறைகின்றபோதும், நிவர்த்தி செய்யப்படாதபோதும் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
 
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குழிப்பட்டி மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், மலைவாழ் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே அவரைத் தொட்டிலில் கட்டி மக்கள் தூக்கிச் சென்றுள்ளனர். 
 
அதனை வீடியோவாக பதிவிட்ட மலைவாழ் மக்கள் ,சாலை வசதி செய்து தராததால் மக்களவை தேர்தலையொட்டி  எந்தக் கட்சியினரும் ஓட்டுக் கேட்டு மலைவாழ் கிராமத்திற்கு வர வேண்டாம் என மக்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமோசா உள்ளே இருந்த ஆணுறை: புனே கேண்டீன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு.!