முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தற்போது ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவருக்கு பலாப்பழம் சின்னம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அவ ராமநாதபுரத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று டங்க் ஸ்லிப்பாகி வாக்கு கேட்டதை அடுத்து அருகில் இருந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அவர் சுதாரித்து பழக்க தோஷத்தில் இரட்டை இலை சின்னம் என்று சொல்லிவிட்டேன் என்றும் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் அவர் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியை பெற்றுள்ள ஓபிஎஸ் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் தொகுதியில் அவரது பெயரிலேயே 5 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் திமுக கூட்டணியின் சார்பில் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்திரபிரபா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அவர் ராமநாதபுரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது டங்க் ஸ்லிப் ஆகி இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்ன நிலையில் அடுத்த நொடியே சமாளித்து சிரித்தபடியே பழக்க தோஷத்தில் இப்படி வந்து விட்டது, பலாப்பழம் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று கூறினார்.