Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்த நாய் கடித்து ஏழை தொழிலாளி பலி.. அலட்சியத்தால் பறிபோன உயிர்..!

Siva
புதன், 20 ஆகஸ்ட் 2025 (08:01 IST)
சென்னையின் ஜாஃபர்கான்பேட்டை பகுதியில், நடைப்பயிற்சிக்காக அழைத்து வரப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததில், சமையல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜாஃபர்கான்பேட்டை VSM கார்டன் பகுதியில் வசித்து வந்த கருணாகரன் என்ற சமையல் தொழிலாளி, தனது நண்பருடன் வீட்டின் முன் பேசிக்கொண்டிருந்தபோது  அதே பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவர், தனது வெளிநாட்டு வளர்ப்பு நாயை நடைப்பயிற்சிக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது, நாய் திடீரென கருணாகரன் மீது பாய்ந்து, அவரது தொடை மற்றும் இடுப்பு பகுதியில் கடுமையாக கடித்துள்ளது.
 
இந்தத் தாக்குதலில் கருணாகரன் பலத்த காயமடைந்தார். நாயை கட்டுப்படுத்த முயன்ற பூங்கொடி என்பவருக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கருணாகரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
அலட்சியத்தால் பரிதாபமாக பலியான ஒரு உயிர் குறித்த இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் வாக்குவாதத்தால் பகை ஏற்படலாம்! இன்றைய ராசி பலன்கள் (20.08.2025)!

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments