உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனால் வாழ்த்துவோம் வரவேற்போம், வேறு என்ன செய்ய முடியும், அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் தான் உள்ளோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீமான் அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, என் கட்சியின் இளைஞர்கள் வாக்குகளை கவர்வதற்காக தமிழ் புதல்வன் திட்டம் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார் .
உதயநிதி துணை முதலமைச்சர் ஆனால் வரவேற்போம், வாழ்த்துவோம், வேறு என்ன செய்ய முடியும், அனைத்தையும் அகதி கொள்ள வேண்டிய நிலையில் தான் நாங்கள் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
தலித்துகள் முதலமைச்சர் ஆக முடியாது என்று திருமாவளவனின் கருத்தை வரவேற்கிறேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்று அவர் கூறிய கருத்தை எதிர்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் மாநாட்டிற்கு இடம் தருபவர்களை மிரட்டுவது ஜனநாயகமா என்றும் இது சர்வாதிகாரம் என்று கூட சொல்ல முடியாது, கொடுங்கோன்மை என்று தான் சொல்ல வேண்டும் அவர் கூறினார். மேலும் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது கொடுமையான செயல் என்றும் கேவலமான அசிங்கமான அரசியல் என்றும் அவர் கூறினார்