Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணப்பட்டுவாடா ஆவணங்களில் முதலமைச்சர் உள்பட 6 அமைச்சர்களின் பெயர்கள்

பணப்பட்டுவாடா ஆவணங்களில் முதலமைச்சர் உள்பட 6 அமைச்சர்களின் பெயர்கள்
, சனி, 8 ஏப்ரல் 2017 (17:15 IST)
ஆர்.கே.நகர் தொகுதில் பணம் பட்டுவாடா குறித்த ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அதில் முதலமைச்சர் உள்பட 6 அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.





 

 
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 85 சதவீத நபர்களுக்கு ரூ.4000 வீதம் பணம் பட்டுவாடா செய்யப்படுவதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது. இந்த ஆவணம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணமா அல்லது பணம் பட்டுவாடா செய்யப்படுவதற்கான ஆவணமா என்பது குறித்து தெரியவில்லை.
 
ஆனால் இந்த ஆவணத்தில் முதல்வர் பழனிச்சாமி, செங்கோட்டையன், தங்கமணி, சீனிவாசன், ஜெயக்குமார் உள்பட 6 அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமைச்சர் விஜய் பாஸ்கர் வீட்டில் மற்றும் எழும்பூர் விடுதியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்த ஆவணங்களை கொண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 85 சதவீத மக்களுக்கு தலா ரூ.4000 பட்டுவாடா செய்ய முடிவு செய்துள்ளனர். மொத்தம் ரூபாய் 89 கோடி 65 லட்சம் 85 ஆயிரம் தொகை அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அமைச்சர்களும் ஒரு தொகையை பெற்றத்தற்கான, அவர்களின் கையெழுத்து அதில் உள்ளது. 
 
தற்போது இந்த ஆவணங்கள் அனைத்தும் பொய்யானது என அதிமுக தரப்பில் தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலியையும் மகனையும் கொலை செய்ய முயற்சித்த காதலன்