மும்பை அருகே கதலியையும், அவரது மகனையும் பிளேடால் கீறி கொலை முயற்சியில் ஈடுப்பட்ட காதலைனை காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்து சந்தோஷ் பவன் அருகே கதம் சவால் பகுதியைச் சேர்ந்த கவிதா ரெட்டி(32) எனபவருக்கும் யோகேஷ் காம்பே(32) என்பவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. கவிதாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கவிதாவுக்கும், காம்பேவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கவிதா தனது நண்பர் வீட்டில் சென்று தங்கியுள்ளார். நேற்று இரவு காம்பே கவிதா இருக்கும் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காம்பே, தன் கையில் இருந்தால் பிளேடால் கவிதாவை கீறியுள்ளார். இதை தடுக்க ஓடி வந்த கவிதாவின் மகனையும் கீறியுள்ளார்.
பின்னர் அவரும் கழுத்தை கீறிக்கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கவிதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காம்பேவுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.