அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கியுள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் இந்த பணம் அடுத்த கல்வி ஆண்டு முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் என்ற திட்டம் இருந்து வந்த நிலையில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1000 வழங்குவதற்காக முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவிகளிடம் இருந்து சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றதற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.