தைரியமிருக்கா தினகரன்?: சவால் விடும் மதுசூதனன்!
தைரியமிருக்கா தினகரன்?: சவால் விடும் மதுசூதனன்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 80-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அங்கு பிரதான போட்டியென்பது திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக இரு அணிகளை சேர்ந்த தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கு இடையே தான் உள்ளது.
இதனையடுத்து ஆர்கே நகரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் இவர்கள். இந்நிலையில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த தினகரன் சார்பில் வாக்கு கேட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள், துண்டு பிரசுரங்களில் சசிகலாவின் புகைப்படத்தை முற்றிலுமாக புறக்கணித்து ஜெயலலிதா மற்றும் தினகரன் புகைப்படங்களே இடம்பெற்றன.
இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன் சசிகலாவின் புகைப்படம் இல்லாத இந்த போஸ்டர் விவகாரத்தை கையில் எடுத்து பிர்ச்சாரத்தை மேற்கொண்டார்.
சசிகலா சிறைக்கு செல்லும் முன் தினகரனை துணை பொதுச்செயலாளர் ஆக்கினார். ஆனால் தினகரன் தரப்பு சசிகலாவின் புகைப்படத்தையே பிரசார விளம்பரங்களில் பயன்படுத்தவில்லை.
சசிகலாவின் புகைப்படத்தை போட்டால் தனக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது தினகரனுக்கு தெரியும். தைரியம் இருந்தால் சசிகலாவின் புகைப்படத்தை போட்டு தினகரன் வாக்கு சேகரித்து பார்க்கட்டும் என சவால் விட்ட மதுசூதனன் சசிகலாவை முன்னிறுத்தினார் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதாலேயே அவரது படத்தை தவிர்த்துவிட்டனர் என்றார்.