Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊடகங்களை பார்த்து செருப்படி கேள்விகேட்ட நடிகர் பிரகாஷ்ராஜ்!

ஊடகங்களை பார்த்து செருப்படி கேள்விகேட்ட நடிகர் பிரகாஷ்ராஜ்!

ஊடகங்களை பார்த்து செருப்படி கேள்விகேட்ட நடிகர் பிரகாஷ்ராஜ்!
, ஞாயிறு, 26 மார்ச் 2017 (10:56 IST)
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 13 நாட்களாக மண்டை ஓட்டுடன், கோமனத்துடன் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும், வறட்சி நிவாரண நிதி வழங்குதல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்து தென்னிந்திய நடிகர் சங்கம் டெல்லி சென்று விவசாயிகளை நேற்று சந்தித்தனர். மேலும் நிதியமைச்சரையும் சந்தித்து மனு அளித்தனர். நடிகர் விஷால், பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.
 
இவர்களை தேசிய ஊடகங்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரகாஷ்ராஜிடம் மைக்கை நீட்டி பேட்டியெடுத்தனர். ஆனால் பிரகாஷ்ராஜ், 11 நாட்களாக விவசாயிகள் போராடுகிறார்கள், அப்போது வராத நீங்கள், இப்போது நடிகர்கள் வந்தவுடன் வருகிறீர்கள். இவ்வளவு நாட்களாக எங்கு சென்றீர்கள் என்று முகத்தில் அறையும்படி கேட்டார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் விஜயபாஸ்கரை தந்தி டிவி மக்கள் மன்றத்தில் பேச விடாமல் கடும் அமளி! (வீடியோ இணைப்பு)