Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்போது வரும் சினிமா பாடல்களைக் கேட்காதீர்கள் : இளையராஜா

Advertiesment
Do not ask
, வெள்ளி, 21 டிசம்பர் 2018 (17:23 IST)
சேலத்தில் உள்ள ஏவிஎஸ் கல்லூரி  விழா ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜாவுக்கு மாணவர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்  தன் அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவர் கூறியதாவது, 'இசையமைப்பாளர்கள் காப்பி அடிக்காமல் சொந்த சிந்தனையோடு பாடல் இயற்ற வேண்டும். நான் இசையமைக்க அதிகளவு நேரம் எடுத்துக்கொண்டது கிடையாது. ஆனால் பாடும் நிலாவே தேன் கவிதை பாடலுக்கு அதிக நேரம் எடுத்துகொண்டேன். நம்முடைய பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டுமெனில் நிச்சயமாக இப்போது வெளிவரும் சினிமா பாடல்கள் கேட்பதை நிறுத்த வேண்டும் என  தெரிவித்தார்.
 
மேலும், தன் பள்ளி நாட்களையும் சிறு வயது நிகழ்வுகளையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில் ’தான் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போனதும் , அப்படி படிக்காமல் வேலை செய்யும் போது பாட்டுப் பாடியதையும், சம்பளம் பெற்று நோட்டு வாங்கி அதை நுகர்ந்து பார்த்த போது தான் பள்ளி படிப்பை முடித்ததற்கான சந்தோஷம் அடைந்ததாகவும் ஆனால் இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றாலும் அந்த சிறிய வயது சந்தோஷத்திற்கு  முன் எதுவும் நிகராகாது. நான் இசையமைப்பாளர் ஆவேன்  என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.’இவ்வாறு  அவர் தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டென்ஷன் ப்ஃரீ ! சென்னையில் முதன் முதலாக ஆன்லைனில் டீசல் விற்பனை ...