Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அமோக வெற்றி.. கதிர் ஆனந்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (17:30 IST)
வேலூர் தேர்தலில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்திற்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதி ஆனந்தும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

தபால் வாக்குகள் எண்ண தொடங்கியதிலிருந்தே அதிமுக முன்னிலையில் இருந்தது. 11 மணிக்கு மேல் திமுக வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்த சுற்றுகளில் திமுக கணிசமான வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்க தொடங்கியது. எனினும் 10000 ஓட்டுகள் வித்தியாசத்திலேயே இரண்டு கட்சிகளும் நீடித்து வந்ததால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் வலுவாக இருந்தது.

21 சுற்று முழுவதுமாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இருவருக்கும் இடையே 8,141 வாக்குகளே வித்தியாசம் இருந்தது.

இதனை தொடர்ந்து வேலூர் தேர்தலில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்ற கதிர் ஆனந்திற்கு மாவட்ட ஆட்சியர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் அமோக வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

கூரியர் கொடுப்பது போல வந்து இளம்பெண் வன்கொடுமை! - அதிர்ச்சி சம்பவம்!

சாக்கடையில் இருந்த நாய்க்குட்டியை மீட்ட கபடி வீரர்.. காப்பாற்றியவரையே நாய் கடித்ததால் பரிதாப பலி..!

மேகாலயா தேனிலவு கொலையை பார்த்து கணவரை கொலை செய்த பெண்.. கள்ளக்காதலர் தலைமறைவு..!

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்: துரைமுருகன் புகழாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments