தமிழக அரசுக்கு எதிராக திமுக ரூ.11 கோடி செலவில் வழக்குகள்!

புதன், 29 ஆகஸ்ட் 2018 (19:56 IST)
தமிழக அரசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்குகளுக்கு ரூ.11 கோடி செலவாகியுள்ளது. 

 
தமிழக அரசுக்கு எதிராக திமுக சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. குக்கா விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு கோரிய வழக்கு, ஓபிஎஸ் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு என திமுக சார்பில் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. 
 
இந்நிலையில் தமிழக அரசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்குகளுக்கு ரூ.11 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கையில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக திமுக கணக்கு தணிக்கை குழு உறுப்பினர் தெரிவித்தார்.
 
ஆண்டு தோறும் கணக்கு தணிக்கை திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கோரிக்கை