திமுகவுக்கு 2வது இடம், அதிமுகவுக்கு டெபாசிட் காலி: தினகரன் சரவெடி

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (20:34 IST)
அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வரும் டிடிவி தினகரன், ஆர்.கே.நகரில் பெற்ற மிகப்பெரிய வெற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் அவருடைய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்கள் எண்ணிகை அதிகமாகி கொண்டே வருவதால் திராவிட கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
 
இந்த நிலையில் விரைவில் நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும் என சற்றுமுன் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
 
திருப்பரங்குன்றம், திருவாரூர்  ஆகிய இரு தொகுதிகளிலும் திமுகவுக்கு 2-வது இடம் கிடைக்கும் என்றும், அதிமுக டெபாசிட் கூட கிடைக்காது என்றும் தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் கட்சிக்கு வந்தால் அவர்களை ஏற்கமாட்டோம் என்றும் தினகரன் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.
 
பாஜகவை திடீரென கடுமையாக இன்று ஸ்டாலின் விமர்சனம் செய்தது குறித்து கருத்து தெரிவித்த தினகரன், 'கருணாநிதி நினைவேந்தலுக்கு அமித்ஷா வரமாட்டார் என்ற விரக்தியில் ஸ்டாலின் பாஜகவை விமர்சித்துள்ளதாக தெரிவித்தார்-

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பாஜக மீது பாயந்த ஸ்டாலின்: தேவையா இது? என நெட்டிசன்கள் கிண்டல்