Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடியாது.. எங்களுக்கு திமுக தலைவர்தான் வேண்டும்! – போஸ்டர் ஒட்டிய திமுகவினர்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (12:47 IST)
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட நிலையில் நகராட்சி, பேரூராட்சி பதவிகள் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கி இருந்தது. ஆனால் அந்த பகுதிகளில் தலைமை அனுமதி இல்லாமல் சில திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இதை கண்டித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிய இடத்தில் போட்டியிட்ட திமுகவினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ஆனாலும் பலர் ராஜினாமா செய்யாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விசிகவுக்கு திமுக ஒதுக்கிய தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் விசிக வேட்பாளர் சின்னவேடிக்கு எதிராக திமுகவின் புஷ்பராஜ் நின்று வெற்றி பெற்றார். தற்போது கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், புஷ்பராஜ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஆளும் திமுக தலைமைக்குதான் நாங்கள் வாக்களித்தோம். எங்களுக்கு திமுக தலைமைதான் வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன., இந்த போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments