Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் அட்டகாசம்!

திமுக இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் அட்டகாசம்!

Advertiesment
திமுக இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் அட்டகாசம்!
, திங்கள், 20 மார்ச் 2017 (09:31 IST)
எதிர்க்கட்சியான திமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளமான முரசொலியை லிஜியன் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இந்த ஹேக்கர்கள் குழு கடந்த காலங்களில் பல இணையதளங்களை முடக்கி அதன் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இந்நிலையில் முரசொலி இணையதளத்தை முடக்கிய லிஜியன் ஹேக்கர்கள் குழு அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்ய வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மோசடிகளால் பாதிக்கப்படக்கூடியவை என கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது முட்டாள் தனமானது: கங்கை அமரன் சீற்றம்!