Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் டோட்டலி அப்செட்! கேட்டும் கொடுக்காத ஸ்டாலின்...

Advertiesment
காங்கிரஸ் டோட்டலி அப்செட்! கேட்டும் கொடுக்காத ஸ்டாலின்...
, திங்கள், 1 ஜூலை 2019 (13:01 IST)
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளது. 
 
நடந்து முடிந்த தேர்தல் தமிழகத்தில் திமுக அமோக வெற்றியை பெற்றது. திமுகவின் வெற்றி தோல்வியில் சரிந்த காங்கிரஸுக்கு சற்று பலமாக இருந்தது. இந்நிலையில், மாநிலங்களவையில் திமுகவிற்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.  
 
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் போட்டி என அறிவிக்கப்ப்ட்டுள்ளது. மேலும் மூன்று இடங்களில் ஒரு இடம் தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  
webdunia
திமுகவின் இந்த முடிவால் காங்கிரஸ் கட்சியினர் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனராம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்காக திமுகவின் உதவியை காங்கிரஸ் எதிர்ப்பார்த்தது. 
 
கடந்த 30 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக அசாமில் இருந்து தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங், ஆனால் இம்முறை காங்கிரஸுக்கு அசாமில் போதிய பலம் இல்லாததால் திமுக உதவியை நாடியது. 
 
அப்போது பதில் ஏதும் கூறாத திமுக தரப்பு இப்போது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுபவர்களையும் அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்? ஆதரவு கொடுக்க ரெடியான திருநாவுக்கரசர்: கடுப்பில் காங்கிரஸார்!!