திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் ; கலைஞர் பிறந்தநாள் டார்கெட்!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (12:39 IST)
ஜூன் மாதம் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் 1 கோடி புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்க திமுக திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்தநாள் விழாவை இந்த ஜூன் தொடங்கி அடுத்த ஜூன் வரை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கலைஞரின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலான நிகழ்வுகளை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில் கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக 1 கோடி புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்க அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 3 தொடங்கி ஜூன் 3ம் தேதிக்குள் 1 கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments