ஆர்.கே.நகரில் திமுக தோல்வி அடைந்ததற்கு மு.க.ஸ்டாலினே காரணம் என மு.க.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். பிரதான எதிர்கட்சியான திமுக தோல்வி அடைந்தது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்நிலையில் இதுபற்றி தொலைக்காட்சி ஒன்றில் கருத்து முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்த அழகிரி “செயல் தலைவராக ஸ்டாலின் உள்ளவரை திமுக தேறாது. வேனில் சுற்றி வந்து பேசினால் மட்டும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். களப்பணி ஆற்ற வேண்டும். அதை தினகரன் செய்தார். திமுகவில் புதிதாக வருபவர்களுக்கு மட்டுமே பதவி அளிக்கப்படுகிறது” எனக் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஸ்டாலினின் ஆதரவாளர் எழுதிய கட்டுரை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காயத்தை குருதியால் கழுவாதே என்றார் #மௌலானா_ரூமி (ரஹ்மத்).. அதைதான் செய்கிறார் அழகிரி.. ஆனால் பாருங்கள் கோபம் வரவில்லை பரிதாபம் வருகிறது.
இனி எந்த தேர்தலிலும் திமுக ஜெயிக்காது .. அழகிரியின் இயலாமை கோபமாய் வருகிறதே தவிர வேறொன்றும் இல்லை....
ஒரு இடைத்தேர்தல் அது இத்தனை கொடூரமாய் சிந்தித்து.. சொல்லியிருப்பதிலிருந்தே யாரும் அவரை கண்டுக்கொள்வதில்லை என்று ஆதங்கம் தெரிகிறது..மாபெரும் இயக்கத்தில் வெற்றிகள் தோல்விகள் வரலாற்றுப்பிழைகள்.. நிறைய கருத்தொற்றுமைகள் / வேற்றுமைகள் வர கூடும்.. அது அந்தந்த சூழலில் பாதிப்பை தரும் ஆனால் அதுவே நிரந்தரமில்லை.. தோல்விகளில் இருந்து படிப்பினைகள் பெறுவோமென நம்பிக்கை தரும் வார்த்தைகளை தந்திருக்கிறார்.. செயல் தலைவர்..
.திமுகவின் தோல்வி சிலருக்கு அதிக மகிழ்ச்சியை தந்திருக்கிறது ஊடகங்கள் அதற்கு எண்ணெய் ஊற்றி எரிய விடுகிறது ..இதில் சிலர் குளிர்காய்கின்றனர்..சிலர் இப்போது அழகிரி தேவை என பேசுகிறார்கள் .. அழகிரி திறமையானவரைப்போல காட்ட முயற்சிக்கும் சூழ்ச்சியின் பின்னால் திமுகவை .. திராவிட இயக்கத்தை கடுமையாக எதிர்ப்போரின் கைகள் தெரிகிறது. கலைஞர் பெருமகன் செய்த அரசியல் பிழைகளில் ஒன்று அழகிரிக்கு பதவி தந்தது.. மத்திய அமைச்சராக இருந்த போது அவரின் திறமையை..? நாம் கண்டதுதான்.. நாடாளுமன்றத்தில் பேசமாலே போன ஒரு அமைச்சர்... அதுவும் திமுகவிலிருந்து என்பது பலரை புருவம் உயர்த்தசெய்தது... மாறன்.. பாலு ராசா போன்றவர்களை தந்த திமுகதான் அழகிரியையும் தந்ததா என மூத்த அரசியல்வாதி சொன்னதை நானே கேட்டிருக்கிறேன்.. பரபரப்பாக பேசி எதிர்மறை கருத்துக்களை மட்டுமே நம்பி அரசியல் செய்கிறவர் அவ்வளவுதான்...
கட்சி அதிகாரம் இளையவருக்கு போனதில் கொண்ட கொடும்பகை தன்னிலை மறந்து பேசவைக்கிறது.. இது அப்பனின் சொத்தல்ல அப்பன் தலைமையிலான இயக்கம்.. இங்கே உழைக்கிறவன்.. மக்கள் விரும்புகிறவன் தான் தலைமையேற்க முடியுமே தவிர.. தலைவர் கலைஞர் மொழியில் சொல்லவேண்டுமெனில் சங்கரமடமல்ல.. இது .. வாய்ப்புகள் வழங்கபட்டது அதில் திறமையை காட்ட தவறியதும் .. ஒரு அமைச்சகத்தை கூட நிர்வகிக்க திறமையின்றி இணை அமைச்சரை வைத்து ஒப்பேற்றியதும் அறிந்துதான்.. மாபெரும் இயக்கத்தை பிளவுபடுத்த நினைத்ததால் தலைவரே முகத்தில் முழிக்காதே என விரட்டியதும் .. ஆறாண்டு கழகத்திலிருந்து நீக்கி வைத்ததும் நடந்தது.. தவறுக்கு வருத்துவதை விடுத்து மீண்டும் மீண்டும் தவறுகளை செய்துவந்தால் .. அருகிலிருக்கிற விரல்விட்டு எண்ணுபவரும் வெளியேறிவிடுவர்...
பேட்டி முழுவதுமே தனிமனித வன்மம் மேலிடுகிறது.. ஆரம்பம் முதலே தளபதியோடு ஏற்பட்ட பிணக்கம் ..பெத்த அப்பனிடமே மூன்று மாதத்தில் செத்துவிடுவான் என சொல்லவைத்தபோது மனதின் ஆழத்தின் கொடூர வன்மம் குடிகொண்டிருந்ததை காணமுடிந்தது.. விமர்சனம் என்பது வேறு.. உழைப்பவர்களை இனங்கண்டு பதவிகள் தரவேண்டுமென்பதை ஏற்றாலும்.. மீதமுள்ளவை காழ்ப்புணர்ச்சியில் வந்தவை..
ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்...தளபதியாரோடு திமுகவினர் கொண்டுள்ள பிணைப்பு ..இங்கேயும் மௌலானா ரூமி அவர்களையே துணைக்கழைத்து சொல்கிறேன்...
நீரோடு ஈரத்தை எப்படி பிரிக்கமுடியாதோ அப்படி தான்; திமுகவினர் தளபதியோடு கொண்டுள்ள உறவு....
கடைசியாக...
திமுகவில் இருப்பவர்கள் கொள்கையில் இணைந்தவர்கள் தோல்விகளையும் வெற்றிகளையும் இயக்கத்தின் வளரிச்சிக்காக மாற்றியவர்கள்.. கனிமொழியோ அழகிரியோ ஏன் ஸ்டாலினோ .. எதிர்மறை கருத்துக்களை சொன்னால், திராவிட சித்தாந்தத்திலிருந்து; விலகிபோனால் இருக்குமிடம் தெரியாமல் போவீர்கள்.. தினகரனிடம் பரிதாபகரமாக தோற்றதாக சொல்லும் அழகிரி ஆண்டிபட்டியில் தோற்றதை எப்படி அழைப்பார்...?
காயங்களை விழுப்புண்ணாகவே பார்க்கும் திராவிட குணம் எங்கே போனது...அழகிரியின் பேச்சு செயலும் புறந்தள்ள வேண்டியவை..
என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.