Publish Date: Thu, 19 Mar 2026 (11:05 IST)
Updated Date: Thu, 19 Mar 2026 (11:08 IST)
2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது தேமுதிக. நடிகர் விஜயகாந்த் தேமுதிகவை துவங்கியதில் இருந்தே திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. கலைஞர் நெருக்கமாக பழகியிருந்தாலும் அரசியல்ரீதியாக கருணாநிதியை தொடர்ந்து விமர்சித்து வந்தார் விஜயகாந்த்..
தீயசக்தி என்று திமுகவை சொல்லவில்லையே தவிர கலைஞரை கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் விஜயகாந்த். எனவேதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவராக மாறினார் விஜயகாந்த். அதேநேரம் அவர்கள் உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் அரசியலில் இருந்து விலகியிருந்தார். தற்போது அவர் இல்லாத நிலையில் அவர் மனைவி பிரேமலதா தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைத்திருக்கிறார்..
10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜயசப தொகுதியை கொடுக்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி என முடிவெடுத்தார் பிரேமலதா. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி இதை கொடுக்க முன்வரவில்லை. எனவே திமுகவிடம் பேசினார். திமுகவும் பிரேமலதாவின் சகோதரருமான சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து விட்டது. அதேநேரம் திமுகவில் அதிக கட்சிகள் இணைந்துள்ளதால் தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை கொடுக்க முடியாது என கைவிரித்துவிட்டது திமுக. அநேகமாக 6 அல்லது 7 தொகுதிகளை கொடுப்பார்கள் என தெரிகிறது..
இதில், சோகம் என்னவெனில் இதுவரி தொகுதி எண்ணிக்கையை குறித்து பேசுவதற்கு கூட தேமுதிகவை திமுக அழைக்கவில்லை. ஒரு ராஜ்யசப சீட்டுக்காக ஏன்டா திமுக கூட்டணியில் இணைந்தோம் என பிரேமலதா வருத்தப்படுவதாக செய்திகள் கசிந்துள்ளது.