Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

Mahendran
சனி, 6 ஜூலை 2024 (09:12 IST)
அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற்று  திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி  கடிதம் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா மற்றும் பாரதிய சாக் ஷியா ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் இந்த சட்டம் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக இந்த சட்டம் ஆங்கிலத்தில் இல்லாமல் ஹிந்தியில் பெயர் உள்ளது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பதும் ஆனால் எதிர்ப்பையும் மீறி ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த சட்டம் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சென்னையில் இந்த சட்டத்தின் அடிப்படையில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில் தற்போது மத்திய அமைச்சர்  அமித்ஷாவை நேரில் திமுக எம்பி திருச்சி சிவா சந்தித்து இந்த சட்டத்திற்கு திமுகவின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments