Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்..! புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரிக்கை..!!

Mamtha

Senthil Velan

, வெள்ளி, 21 ஜூன் 2024 (15:21 IST)
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். 
 
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  இந்திய அரசியலமைப்பின் 348வது பிரிவை மீறும் வகையில், இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக, மத்திய அரசு உருவாக்கி உள்ள மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் இந்த சட்டங்களில் பிழைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 18ல் கடிதம் எழுதியிருந்தார்.
 
இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், '146 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயகத்தை இருட்டடிப்பு செய்த சம்பவம் எனவும் தெரிவித்துள்ளார்.


எனவே இந்த மூன்று சட்டங்களையும் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு மம்தா வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளச்சாராய மரணம் எதிரொலி..! மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு..!