Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவ்வளவு நடந்தும் விஜய் ஏன் வாயைத்திறக்கலை? வெளுத்து வாங்கும் திமுக எம்.எல்.ஏ

Advertiesment
இவ்வளவு நடந்தும் விஜய் ஏன் வாயைத்திறக்கலை? வெளுத்து வாங்கும் திமுக எம்.எல்.ஏ
, வெள்ளி, 9 நவம்பர் 2018 (20:38 IST)
சர்கார்' திரைப்படத்தின் பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் விஜய் இதுகுறித்து எதுவுமே வாய் திறக்கவில்லை. அவரது படத்திற்காக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட விஜய் மெளனமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webdunia
இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கருத்து கூறியபோது, 'விஜய்யின் மெளனம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. இவர் வேண்டுமென்றே புரமோஷனுக்காக பிரச்சனையை ஏற்படுத்தி படத்திற்கு விளம்பரம் தேடுவது போல் தெரிகிறது. இல்லையென்றால் இந்நேரம் விஜய் கொந்தளித்து இருந்திருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதே கேள்வியை விஜய் ரசிகர்களும் விரைவில் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ