தேவர் ஜெயந்தி குருபூஜை! திமுக அமைச்சர்கள் மரியாதை!

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

தேவர் ஜெயந்தி குருபூஜை! திமுக அமைச்சர்கள் மரியாதை!

Advertiesment
Guru Poojai
, ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (09:43 IST)
இன்று பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையில் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரரும், அரசியல் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இருந்து பலரும் பசும்பொன் சென்றுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள பசும்பொன் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு முதுகுவலி உள்ளதால் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை.

அவர் கலந்து கொள்ளாத நிலையில் திமுக அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், ஐ, பெரியசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Edited By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று கந்தசஷ்டி திருவிழா; திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! – குவியும் பக்தர்கள்!