Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் காவலரிடம் சில்மிஷம்; திமுகவினர் இருவர் சஸ்பெண்ட்! – அமைச்சர் துரைமுருகன் அதிரடி!

Advertiesment
பெண் காவலரிடம் சில்மிஷம்; திமுகவினர் இருவர் சஸ்பெண்ட்! – அமைச்சர் துரைமுருகன் அதிரடி!
, புதன், 4 ஜனவரி 2023 (08:28 IST)
சென்னையில் பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்ற திமுகவினரை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்துள்ளார் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக உள்ள நிலையில் காவல்துறையினர் வன்கொடுமைகளுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அப்படியான பெண் காவலருக்கே சிலரால் ஆபத்து எழுந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னையை சேர்ந்த பெண் காவலர் ஒருவரிடம் இளைஞர்கள் இருவர் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் சென்னை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ப்ரவீன், ஏகாம்பரம் என தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் திமுக கட்சி உறுப்பினர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

பெண்கள் கல்வி, உரிமைக்காக தொடர்ந்து திமுக அரசு பல செயல்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் திமுக தொண்டர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளது கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனடியாக அந்த இருவரையும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்த பொதுசெயலாளர் துரைமுருகன், அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி சமாதி, தகனம் தேவையில்லை: மனித உடலை இயற்கை உரமாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு