பிரச்சினையை சொன்னால் 100 நாளில் தீர்வு!? – புது ரூட்டை பிடித்த திமுக!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (11:32 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் திமுக தனது அடுத்தக்கட்ட பிரச்சாரம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக கிராம சபை கூட்டங்கள் மூலமாக மக்களை சந்தித்து பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அடுத்தக்கட்டமாக “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதியாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின்போது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் புகார்களை அளிக்கும் வகையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் மூலமாக பெறப்பட்ட புகார்கள் பாதுகாக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளும் போர்கால் அடிப்படையில் சரிசெய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

திமுகவின் இந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் கூட்டமானது ஜனவரி 29 ம் தேதி திருவண்ணாமலையில் தொடங்கி 30 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments