Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விச கருத்தை பரப்பாதீர் அண்ணாமலைக்கு திமுக பிரமுகர் ரீடுவீட்

Advertiesment
திமுகவில் இணையும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி
, ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (16:50 IST)
கோவை உக்கடம் அருகே காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் கூறிய கருத்துக்கு,  திமுக பிரமுகர் ராஜிவ்காந்தி விஷ கருத்துகள் பரப்ப வேண்டாம் என டுவீட் பதிவிட்டுள்ளார்.

கோவை உக்கடத்தில் உள்ள  ஈஸ்வரன் கோவில் அருகே காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தன் டவிட்டர் பக்கத்தில்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது.

பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்’’ என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து திமுக பிரமுகர் ராஜிவ்காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில், விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியும் வரை அமைதியா இருங்கள் mr @annamalai_k
எந்த முன்முடிவும் எடுத்து விச கருத்தை பரப்பாதீர் பொது ஒழுங்கு பாதிக்கும் கருத்துகள் வெளியீடுவதை முதலில் நிறுத்துங்கள்!! என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக் கடலில் 12 மணிநேரத்தில் உருவாகும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!