Publish Date: Sun, 23 Oct 2022 (14:38 IST)
Updated Date: Sun, 23 Oct 2022 (14:40 IST)
இன்னும் 12 மணி நேரத்தில் வங்க கடலில் புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக வர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகரும் என்றும் அக்டோபர் 25-ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுநாள் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த புயல் காரணமாக தமிழகம் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருபத்தி ஏழாம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.