Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக... ரூபஸ்ரீ, நோ ஸாரி சுபஸ்ரீ.. துண்டு சீட்டு இருந்தும் உலறல்!!

Advertiesment
ஆக... ரூபஸ்ரீ, நோ ஸாரி சுபஸ்ரீ.. துண்டு சீட்டு இருந்தும் உலறல்!!
, வெள்ளி, 11 அக்டோபர் 2019 (13:56 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வழக்கம் போல உலறிய சம்பவம் தற்போதும் நடந்துள்ளது. 
 
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், பிரச்சாரத்தின் போது சுபஸ்ரீயின் பெயரை ரூபஸ்ரீ என கூறி பின்னர் துண்டு சீட்டை பார்த்து திருத்திக்கொண்டு மீண்டும் சுபஸ்ரீ என கூறி தனது பேச்சை தொடர்ந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
webdunia
குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது பேனர் விழுந்து மரணமடைந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த மரணத்திற்கு பின்னர் ஸ்டாலின் பேனர் வைக்க கூடாது என கறாராக தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். 
 
அதோடு, சுபஸ்ரீ வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறினார். பின்பு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஸ்டமரை கற்பழிக்க முயற்சித்தாரா அமேசான் டெலிவரி பாய்?! – கொடுத்த கேஸை வாபஸ் பெற்ற பெண்!