அமேசான் டெலிவரி பாய் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்த பெண் திடீரென கேஸை வாபஸ் பெற்றிருக்கிறார்.
நொய்டாவில் உள்ள பெண் ஒருவர் அமேசானி மூலமாக பொருள் ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த பொருள் தனக்கு பிடிக்கவில்லையென ரிட்டர்ன் செய்திருக்கிறார். ரிட்டர்ன் செய்த பொருளை வாங்க வந்த அமேசான் ஊழியர் தன்னை மயக்கி கற்பழிக்க முயற்சித்ததாக அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுத்த போலீஸார் அமேசான் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு பொருளை வாங்க வந்த ஊழியரின் விவரங்களை கேட்டறிந்திருக்கிறார்கள். அந்த டெலிவரி பாயிடம் விசாரித்தபோது “ரிட்டர்ன் செய்த பொருளை வாங்க சென்றேன். அவர் என்னை தகாத முறையில் திட்டினார். கோபத்தில் நானும் திரும்ப திட்டினேன். இதுகுறித்து அவர் புகார் அளிப்பதாக அவர் கூறினார். மற்றபடி நான் எதுவும் செய்யவில்லை” என கூறியிருக்கிறார்.
இதனால் போலீஸுக்கு புகார் அளித்த பெண்ணின் மேல் சந்தேகம் ஏற்படவே அவரை மருத்துவ பரிசோதனை செய்ய சொல்லி கேட்டிருக்கிறார்கள். உண்மை வெளிப்பட்டுவிடுமே என்று பயந்த அந்த பெண் பரிசோதனைக்கு மறுத்துள்ளார். மேலும் கேஸை வாபஸ் பெறுவதாகவும் கூறியுள்ளார்.
வழக்குப்பதியப்படுள்ளதால் நீதிமன்றத்திலேயே இதற்கான தீர்வு கிடைக்கும் என போலீஸார் கூறியிருக்கின்றனர். இதுகுறித்து அமேசான் நிறுவனம் “அனைவருக்கும் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்று. இந்த கேஸில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பையும் அமேசான் வழங்கும்” என தெரிவித்துள்ளது.