Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத்தோடு வீட்டு வாசலுக்கு வந்த ஸ்டாலின்: வைரல் வீடியோ!!

Webdunia
வியாழன், 7 மே 2020 (11:29 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் தனது வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து வந்து நின்றார்.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சென்னை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மது விற்பனை தொடங்குவதற்கு எதிராக திமுக அறிக்கை விடுத்துள்ளது. 
 
அதன்படி தமிழ்காத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கருப்பு சின்னம் அணிய வேண்டும். 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்களுக்கு தங்களது வீடுகளுக்கு வெளியே மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 
 
அதன்படி இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் தனது வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து வந்து நின்றார். அவரோடு இளைஞட் அணி செய்ளாலர் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் மனைவி துர்கா ஆகியோரும் வந்து நின்றனர். 
 
நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம். 'கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்’ என முழங்குவோம் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments