Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக தலைவரும் தந்தையுமான கருணாநிதிக்கு செயல் தலைவர் எழுதிய கண்ணீர் மடல்

Advertiesment
திமுக தலைவரும் தந்தையுமான கருணாநிதிக்கு செயல் தலைவர் எழுதிய கண்ணீர் மடல்
, புதன், 8 ஆகஸ்ட் 2018 (11:26 IST)
தலைவரே தலைவரே என அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா என ஸ்டாலின் மனம் உறுகி கண்ணீருடன் மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணி காலமானார். கருணாநிதி மறைவுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் மனம் உருகி கண்ணீருடன் கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில்  எழுதியுள்ளார்.
webdunia
அதில், தலைவரே தலைவரே தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா? எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர் தலைவரே; இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?, உயிருக்கு மேலான என் உடன்பிறப்புகளே என்று ஒருமுறை என்று எழுந்து கூறுங்கள் என்று எழுதியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி