திமுக தலைவர் டூ முதல்வர்: ஆம் ஆத்மி வெற்றியால் தலைமை குஷி!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (13:16 IST)
டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. 
 
டெல்லியில் கடந்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளில் 58 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 12 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. 
 
இந்நிலையில் ஆம் ஆத்மியின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளதாம் திமுக தரப்பு. ஏனெனில் இந்த தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சிக்காக வியூகங்களை வகுத்து கொடுத்தது திமுக தற்போது கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். 
 
இந்த வெற்றியை பிரஷாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். அதேபோல திமுக தலைவர் ஸ்டாலினும் ஆம் ஆத்மிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலுக்கு இப்போதே களப்பணிகளை ஐபேக் நிறுவனத்தின் மூலம் துவங்கியுள்ளது திமுக. எனவே அடுத்த முதல்வர் ஸ்டாலின் என திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் சந்தோசப்பட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments