மத்திய அரசு மீது பழிபோடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் திமுக அரசு மத்திய அரசு மீது பழிபோடுவதை நிறுத்த வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பரிந்துரைகளையும் ஏற்ற பிறகுதான் வரி அமல்படுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பிராண்டட் உணவுப் பொருள்கள் மீதான வரி பற்றி திமுக அரசு பொய் கூறி வருகிறது எனத் தெரிவித்தார்.
மேலும்,மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொக்கயை தமிழகத்திற்கு கொடுத்து விட்டது. ஆனால் மாநில நிதியமைச்சர் கூறியது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசு மீது பழிபோடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.