Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

45 வது ஜிஎஸ்டி கவுன்சில் - கவனிக்கப்பட வேண்டியவை என்ன??

Advertiesment
45 வது ஜிஎஸ்டி கவுன்சில் - கவனிக்கப்பட வேண்டியவை என்ன??
, சனி, 18 செப்டம்பர் 2021 (08:29 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  உத்திரபிரதேசம் லக்னோவில் நடைபெற்றது. 
 
கொரோனா பரவல் காரணமாக காணொளி வாயிலாக கடந்த ஆண்டு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்ட வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நேரடியாக இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு.... 
 
1. கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு.  
 
2. குறிப்பிட்ட வகை உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு. 
 
3. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு 5% வரி குறைப்பு.  
 
4. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டாது. 
 
5. ரூ.16 கோடி மதிப்பில் தசைநார் சிதைவு நோய்க்கு வழங்கப்படும் 2 மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு 
 
6. கேன்சர் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 15%-லிருந்து 5% ஆக குறைப்பு. 
 
7. பயோ டீசலுக்கான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 5% ஆக குறைப்பு. 
 
8. கப்பல் மற்றும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்துக்கு செப். 30 ஆம் தேதி வரை விலக்கு. 
 
9. ஸ்விக்கி, ஜொமாடோ உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் உணவு டெலிவரிக்கு ஜிஎஸ்டி வரி வசூல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி இன்று பதவியேற்பு