Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''திமுக அரசு ஆளும் தகுதி இழந்துள்ளது''- பொன் ராதாகிருஷ்ணன்

''திமுக அரசு ஆளும் தகுதி இழந்துள்ளது''- பொன் ராதாகிருஷ்ணன்
, சனி, 17 ஜூன் 2023 (21:56 IST)
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நேற்றைய இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னாள் அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறு கருத்துக்கு பதிவு செய்ததாக பாஜக மாநில செயலாளர் எஸ் ஜே சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்

இந்த நிலையில் இன்று காலை எஸ்.ஜி. சூர்யா மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் முன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது எஸ்.ஜி. சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்ற காவல் என நீதிபதியை உற்றவிட்டார். இதனை அடுத்து எஸ்.ஜி. சூர்யா மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இவரது கைதுக்கு முன்னாள் அமைச்சரும், பாஜக நிர்வாகியுமான பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர்தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பேச்சுரிமையைப் பறிக்கும் திமுக அரசு.

‘’கருத்தை கருத்தால் எதிர்ப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் ஆளும் திமுக அரசுக்கு இல்லை என்பது தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் மாநில அரசுக்கு எதிராகப் பதிவிடுபவர்களை கைது செய்வதில் இருந்து தெரிகிறது.

நேற்று (16.06.2023) இரவு பாஜக மாநில செயலாளர் சகோதரர் திரு.S.G. சூர்யாவை அவர்களை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிழிய வகுப்பெடுக்கும் திமுக, சமூகவலைத்தளங்களில் திமுக ஆட்சிக்கு எதிராக ஆதாரங்களுடன் பதிவிடுவோரை கைது செய்வதன் மூலம் தங்களின் தவறுகளை மக்கள் பார்வையிலிருந்து, மக்களுக்காக குரல் கொடுப்போரின் குரல்வளையை நெறிப்பதன் மூலம் மறைத்து விடலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர். மக்களின் பேச்சுரிமை மறுக்கும் திமுக அரசு ஆளும் தகுதி இழந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
 
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் சேம்பியனாக மாற்றி வருகிறார் - முதல்வர் முக.ஸ்டாலின்