Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது- பாஜக கண்டனம்

பாஜக   மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா   கைது-  பாஜக கண்டனம்
, சனி, 17 ஜூன் 2023 (12:54 IST)
தமிழக பாஜக   மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா   தனது  சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு  பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக நள்ளிரவில் கைது செய்யபட்டார். இதற்கு தமிழக பாஜகவினர்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''தமிழக பாஜக மாநிலச் செயலாளர் திரு எஸ்.ஜி.சூர்யா  அவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.

விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.

கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை அறிவாலயம் அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு.

பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாதி அடிப்படையில் மாணவரை தேர்ந்தெடுத்தாரா விஜய்? சர்ச்சை கிளப்பும் வீடியோ!