Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தா ஆரம்பிச்சுட்டாங்க.... உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து திமுக வழக்கு

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (19:07 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிஅமாக செய்துவந்த நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் அதே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை விரும்பவில்லை என்றும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்துக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்தத் தேர்தலை இரண்டு கட்சிகளும் தவிர்க்க விரும்பும் என்றும் வதந்திகள் வெளிவந்தன 
 
எனவே இந்த தேர்தலை நடத்த விடாமல் செய்ய இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் இன்னொரு கட்சி அதற்கு மறைமுகமாக ஆதரவு தரும் என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான செய்தியின்படி ’தொகுதி மறு வரையறை பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே இது குறித்து தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
எனவே இந்த முறையும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments