அடுத்த அதிரடிக்கு தயராகும் திமுக
அடுத்த அதிரடிக்கு தயராகும் திமுக
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 24ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து, திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும், மருத்துவ பொது நுழைவுத் தேர்வு குறித்தும், சட்டப்பேரவையில் திமுகவின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.