Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிர்ஷ்டகார அண்ணாச்சி ஓபிஎஸ்

அதிர்ஷ்டகார அண்ணாச்சி ஓபிஎஸ்

Advertiesment
அதிர்ஷ்டகார அண்ணாச்சி ஓபிஎஸ்

கே.என்.வடிவேல்

, சனி, 21 மே 2016 (20:11 IST)
தமிழக அமைச்சரவையில் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

 
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. புதிய அமைச்சரவையில் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் நியமனம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
 
முதல்வர் ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்குரிய நபர்களில் ஓ.பன்னீர்செல்வம் முதன்மை வகிக்கின்றார். அவரது உழைப்பு, விசுவாசம் ஆகியவற்றை பார்த்து ஜெயலலிதா தனது அருகில் வைத்துக் கொண்டார். ஜெயலலிதாவுக்கு அரசியல் ரீதியாக சோதனை ஏற்பட்ட போது, கடந்த 2001 - முதல் 2002 வரை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். ஜெயலலிதாவுக்கு மீண்டும் அரசியல் ரீதியான சிக்கல் வரவே 2014 முதல் 2015 வரை முதல்வராக இருந்தார்.
 
அதன்பிறகு, ஜெயலலிதா அனைத்து வழக்குகளில் விடுதலையான பிறகு தமது அமைச்சரவையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிதியமைச்சர் பதவி வழங்கினார்.
 
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் மீது பல்வேறு சர்ச்சைகள் கூறப்பட்ட போதும், அவர் போடியில் போட்டியிட மீண்டும் சீட் வழங்கினார். இந்த நிலையில், தமது புதிய அமைச்சரவையிலும் ஓ.பன்னீர்செலவத்திற்கு நிதியமைச்சர் பதவியை மீண்டும் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போக்குவரத்துறை அமைச்சராக கரூர் விஜயபாஸ்கர் நியமனம்