Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது செயலாளர் ரெடி! பொருளாளர் யார்? : திமுக பொதுக்குழுகூட்டம்

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (11:51 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் திமுக பொதுசெயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான நபர்களை தேர்ந்தெடுக்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. முன்னதாக திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு நபர்களை தேர்ந்தெடுக்க பொதுக்குழு கூட்டம் மார்ச் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்ப செப்டம்பர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது திமுக பொருளாளராக இருக்கும் துரைமுருகன் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரவலாக பேசிக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் துரைமுருகன் பொருளாளர் பதவியிலிருந்து விலகும் நிலையில் அந்த பதவியை யார் ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொருளாளர் பதவிக்கு ஆ.ராசா, கனிமொழி மற்றும் ஏ.வ.வேலு ஆகியோரில் யாராவது ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என அதிகாரப்பூர்வமற்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments