Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் உயரும் தங்கம் விலை; 40 ஆயிரத்தை நெருங்குகிறது!

Advertiesment
மீண்டும் உயரும் தங்கம் விலை; 40 ஆயிரத்தை நெருங்குகிறது!
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (11:22 IST)
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் தற்போது மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பொருளாதார சரிவுகள் ஏற்பட தொடங்கிய நிலையில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்ததால் தங்கம் விலை உயரத் தொடங்கியது கடந்த மாதத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை மெல்ல விலை குறைந்தது. தற்போது சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்து வருகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.39,776 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.4,924 ஆக விற்பனையாகி வருகிறது.

சமீப காலமாக தங்கம் விலை குறைந்து வந்தது மக்களுக்கு நிம்மதியை அளித்த நிலையில் மீண்டும் விலை உயரத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலகலக்கும் அரசு பள்ளி அட்மிசன்கள்! – கொண்டாட்டத்தில் அரசு பள்ளிகள்!