காவலரை திட்டிய திமுக நிர்வாகி நீக்கம் – திமுக தலைமை அதிரடி!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (11:31 IST)
சென்னையில் காவலரை தகாத வார்த்தையில் திட்டியதாக திமுக பிரமுகர் மீது புகார் எழுந்த நிலையில் அவரை திமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது.

சென்னை ராயபுரம் கிழக்கு பகுதியில் 51வது வார்டில் காவலர் ஒருவர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த திமுக நிர்வாகி ஜெகதீசன் என்பவரை காவலர் விசாரிக்க போக வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஜெகதீசன் காவலரை தகாத வார்த்தைகளில் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜெகதீசன் மீது நடவடிக்கை எடுத்துள்ள திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், அவரை கழக கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதற்காக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயப்படமா எழுதுங்க!.. 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து....

தொகுதி பங்கீட்டில் இழுபறி!.. இன்று டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி...

25 தொகுதிகளுக்கு சம்மதிக்க முடியாது.. தவெகவுடன் கூட்டணி.. ராகுல் காந்தி அதிரடி முடிவு?

போர் எதிரொலி!.. 33 விமான சேவைகள் ரத்து!.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..

விஜய்யின் தஞ்சை கூட்டத்திற்கு அனுமதி? தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments