Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. புதிய முதலீடு வருமா?

Siva
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (08:16 IST)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். 
 
வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் புறப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முதலீட்டு பணிகளை முடித்துவிட்டு, செப்டம்பர் 8-ம் தேதி அவர் தமிழ்நாடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த பயணத்தின்போது, தமிழக முதல்வர் வெளிநாட்டுத் தொழில் அதிபர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் அழைப்பு விடுப்பார். 
 
இதன் மூலம், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்பப்படுகிறது. இத்தகைய பயணங்கள், மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்.. பத்திரிகையாளர்கள் மீது பிரேமல்தா கோபம்..!

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி! ஜப்பானில் அறிவித்த மோடி! - அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா!

பிரதமர் தாயாரை அவதூறாக பேசிய நபர் கைது.. ராகுல் காந்தி கண்டனம்..!

சொந்த பேரனையே தலையை துண்டித்து பலிக் கொடுத்த தாத்தா! - லியோ பட பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments