காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான டி ஆர் பாலு போட்டியிடுகிறார்.
அவரின் சொத்து மதிப்பு ரூபாய் 20கோடியே 88 லட்சத்து 06 ஆயிரத்து 446 என தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
தனது முதல் மனைவி பொற்கொடி இடம் ஒரு கிலோ 50 கிராம் தங்க நகைகளும், இரண்டாவது மனைவி ரேணுகாதேவி இடம் 800 கிராம் தங்க நகைகளும் உள்ளதாகவும்,
ஒரே ஒரு டிராக்டர் மட்டும் உள்ளதாகவும் வேறு ஏதும் கார்களோ, இருசக்கர வாகனங்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கையிருப்பு பணமாக ஒரு லட்சத்து 90 ஆயிரம் மட்டுமே இருப்பதாகவும், தனது முதல் மனைவி இடம் ரூபாய் 10 ஆயிரம், இரண்டாவது மனைவியிடம் ரூபாய் 15 ஆயிரம் ரொக்க கையிருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
*வங்கி இருப்பு*
மேலும் ஆறு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதாகும் அவைகளில் கணக்கு இருப்பாக 11 லட்சத்து 86 ஆயிரத்து 14 ரூபாய் 73 பைசா வங்கி இருப்பாக உள்ளதாகவும்,
தனது முதல் மனைவியிடம் 3 லட்சத்து எட்டாயிரத்து 114 ரூபாய் வங்கி இருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக தனது பெயரில் டிஆர் பாலு 13 லட்சத்து 72 ஆயிரத்து 908 வைத்திருப்பதாகவும், தனது முதல் மனைவி பொற்கொடி பெயரில் 16 லட்சத்து 64 ஆயிரத்து 387 ரூபாய் வைப்பு நிதியாகவும்,
தனது இரண்டாவது மனைவி ரேணுகாதேவி பெயரில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 773 ரூபாய் 76 பைசா நிரந்தர வைப்பு நிதியாக வங்கிகளில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கம்பெனிகளில் முதலீடுகளாக 96 லட்சத்து 65 ஆயிரத்து 540 தனது பெயரிலும்,
தனது முதல் மனைவி பெயரில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 500,
இரண்டாவது மனைவி பெயரில் 23 லட்சத்து 22 ஆயிரத்து 100 ரூபாய் கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2 கம்பெனிகளுக்கு ரூபாய் 14 லட்சத்து 50 ஆயிரம் கடனாக வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்திற்கு அசையா சொத்துக்களாக நிலம் மற்றும் குடியிருப்புகளாக ரூபாய் 18 கோடியே 51 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகும் இருந்த பாலுவுக்கு 20 கோடியே 88 லட்சத்து 06 ஆயிரத்து 446 சொத்து இருந்தும் சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்.