தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தாம்பரத்தில் தனது வார்டை முன்மாதிரியாக மாற்ற உள்ளதாக திமுக வேட்பாளர் சௌமியா கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு சேகரிக்க நாளை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கு இந்த முறை அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தாம்பரம் மாநகராட்சி 60வது வார்டில் வழக்கறிஞரும், சமூக சேவகியுமான சௌமியா கார்த்திக் போட்டியிடுகிறார். தாம்பரம் மாநகராட்சியின் முன்மாதிரியான வார்டாக 60வது வார்டை மாற்றுவதாக வாக்குறுதி அளித்து சௌமியா கார்த்திக் வாக்கு சேகரித்து வருகிறார்.
அவருடன் தாம்பரம் 34வது வட்ட இளைஞரணி செயலாளர்
S.M.ரிஸ்வான் துணை செயலாளர் கருணாநிதி, ஆர்,முரளி , மகளிர் அணி லதா மற்றும் கழக தோழர்கள் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டு வருகின்றனர்.