திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று இன்டர்நெட் மூலம் தொண்டர்களிடையே உரையாடினார். அப்போது அவர் ஆளும் அதிமுக மற்றும் பாஜக அரசுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்
அவர் பேசிக்கொண்டிருந்த போது 2011-2012ஆம் ஆண்டு தானே புயல் தமிழகத்தில் தாக்கியபோது தமிழகம் ஆயிரத்து 740 கோடி இழப்பீடாக கேட்டது. ஆனால் மத்தியில் ஆட்சி செய்து வந்த பாஜக அரசு வெறும் 500 கோடி தான் என்று கூறினார்
அதேபோல் 2012-2013ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக தமிழக அரசு கேட்டது 9,988 கோடி ரூபாய் ஆனால் பாஜக அரசு கொடுத்தது 656 கோடி ரூபாய்தான் என்று கூறினார். திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்ட 2011-12, 2012-13 ஆகிய ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ் தலைமையில் ஆட்சி என்பதும் அந்த ஆட்சியில் திமுகவும் பங்கு கொண்டு இருந்தது என்பதும் 2014ஆம் ஆண்டு தான் பாஜக ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
முக ஸ்டாலின் அவர்களின் இந்த பேச்சால் திமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது