Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் - அண்ணாமலை

வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் -  அண்ணாமலை
, வெள்ளி, 26 மே 2023 (15:26 IST)
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை கோவை கரூர் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வரும் வகையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை நடந்த போது திமுக தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து,  தமிழக  பாஜக  தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் - சட்டம் ஒழுங்கு தோல்வி

''இன்று கரூரில் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் இல்லங்கள் சோதனை மற்றும் மேற்கொள்வதாக இருந்தது.

இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் திரு செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அஷோக்கின் வரித்துறையினரை தங்கள் பணியைச் ஆதரவாளர்கள், வருமான செய்யவிடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தியதோடு சேதப்படுத் தியுள்ளனர்.

அவர்களது வாகனங்களையும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

வருமான வரித்துறையினருக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய தமிழகக் காவல்துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினரின் சோதனை குறித்த தகவல் வழங்கமுடியவில்லை என்று வரித்துறையினர் வந்தது வராததால் பாதுகாப்பு தெரிவித்துள்ளனர். வருமான திமுகவினருக்கு மட்டும் தெரிந்து உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்த போது, உடனடியாக காவல்துறையினர் விரைந்து செல்லாதது ஏன்?

சட்டத்திற்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் கடுமையான மேலும், வருமான தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் வருமான வரி சோதனை: திமுகவினர் தாக்கியதாக 4 அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி..!