Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரசுக்கு 10 தொகுதிகள்: திமுக அறிவிப்பு, ஆனால்....

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (20:44 IST)
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என இன்று அறிவிக்கப்படவிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் அடங்கும்
 
மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவிடமும், பாஜகவிடமும் 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் திமுக கூட்டணில் இது நாடாளுமன்ற தேர்தலுக்காக தொகுதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 21 சட்டமன்ற தொகுதிகள் குறித்து இடைத் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் அதுகுறித்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
மேலும் தேமுதிக இணைவதற்கான வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து அறிவிப்போம் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அனைத்து கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக கூட்டணி குறித்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments